THAIPOOSAM FESTIVAL IN PALANI TEMPLE - 2017
ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியாய் எங்கும் பூரணமாய் நிறைந்துள்ள பரம்பொருள் ஆன்ம கோடிகளுக்கு அருள் செய்யும் பொருட்டு மூர்த்திவடிவம் கொண்டு தீராத வினைகள் எல்லாம் தீர்த்தருளும் கலியுகவரதனாய் அருள்மிகு ஞானதண்டயுதபாணியாய் எழுந்தருளியிருக்கின்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றும் வழிபடும் பக்தர்களுக்கு பேறளிப்பதுமாகிய இப்புண்ணிய பழனி திருத்தலத்தில் தைபூசத் திருவிழா நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2048 சுபஸ்ரீ துர்முகி வருடம் தைத் திங்கள் 21 ம் நாள் 03.02.2017 வெள்ளிக்கிழமை தொடங்கி தைத்திங்கள் 30 ஆம் நாள் 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை முடிய அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
விழா நாட்களில் காலை மாலை நேரங்களில் அருல்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி திருவுலா நடைபெற்று, தைத்திங்கள் 27 ஆம் நாள் 09.02.2017 வியாழக்கிழமை தைபூசத்திருநாளன்று தேர்த்திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் வருகைபுரிந்து அருள்மிகு முருகப் பெருமானின் கழலடி பணிந்து திருவருள் பெற்று இன்புற வேண்டுகிறோம்.
முதலாம் திருநாள்
தை 21. 03.02.2017 வெள்ளிக்கிழமை. இடம் : அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில், பழனி.
கொடியேற்றம்: 03.02.2017
அருள்மிகு வள்ளிசேனா சமேத முத்துக்குமார சுவாமி கொடி கட்டி மண்டபத்தில் எழுந்தருளல். காலை 09.30 ம்ணிக்குமேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம். வாகனம் : இரவு 07.30 மணிக்கு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி புதுச்சேரி சப்பரத்தில் இரதவீதி திருவுலா.
இரண்டாம் திருநாள்
தை 22. - 04.02.2017 சனிக்கிழமை. இடம் : அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 04.02.2017
காலை 08.45 மணிக்கு : அருள்மிகு தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. தெற்கு இரதவீதி பள்ளர் மடத்தில் எழுந்தருளல்.வாகனம் : இரவு 07.30 மணிக்கு சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் இரதவீதி திருவுலா.
மூன்றாம் திருநாள்
தை 23. - 05.02.2017 ஞாயிற்றுகிழமை. இடம் : அருள்மிகு பட்டத்து விநாயகர் திருக்கோயில், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 05.02.2017
காலை 09.00 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. அருள்மிகு பட்டத்து விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளல். வாகனம் : இரவு 07.30 மணிக்கு, வெள்ளிக்கிழமை காமதேனு வாகனத்தில், சுவாமி இரதவீதி திரு உலா.
நான்காம் திருநாள்
தை 24. - 06.02.2017 திங்கள்கிழமை. இடம் : பெரிய கடைவீதி, உடையார் மடம், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 06.02.2017
காலை 09.00 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. பெரிய கடைவீதி, உடையார் மடத்தில் சுவாமி எழுந்தருளல்.வாகனம் : இரவு 07.30 மணிக்கு, வெள்ளிக்காமதேனு வாகனத்தில், சுவாமி இரதவீதி திரு உலா.
ஐந்தாம் திருநாள்
தை 25. - 07.02.2017 செவ்வாய்கிழமை. இடம் : கிழக்கு இரதவீதி, 12 - 6 செட்டியார் மடம், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 07.02.2017
காலை 08.45 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. கிழக்கு இரதவீதி, 12 - 6 செட்டியார் மடத்தில் சுவாமி எழுந்தருளல்.வாகனம் : இரவு 07.30 மணிக்கு, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி இரதவீதி திரு உலா.
ஆறாம் திருநாள்
தை 26. - 08.02.2017 புதன்கிழமை. இடம் : பழைய தாராபுரம் சாலை, சுகந்த விலாஸ், விபூதி ஸ்டோர், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 08.02.2017
காலை 08.45 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. பழைய தாராபுரம் சாலை, சுகந்த விலாஸ், விபூதி ஸ்டோர் - ல் சுவாமி எழுந்தருளல். திருக்கல்யாணம் : இரவு 07.30 மணிக்கு மேல் 08.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் அருள்மிகு வள்ளி தெய்வ நாயகியம்மன் முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம். வாகனம் : இரவு 09.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி இரதவீதி திரு உலா.
ஏழாம் திருநாள்
தை 27. - 09.02.2017 புதன்கிழமை. இடம் : பெரிய நாயகியம்மன் திருக்கோயில், பழனி.
தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் : காலை 05.00 மணிக்குள் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல்.
திருத்தேர் ஏற்றம் : காலை 10.30 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் மேஷ லக்னத்தில் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல்.
மாலை 04.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல். வாகனம் : இரவு 07.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் சுவாமி இரதவீதி திருவுலா.
எட்டாம் திருநாள்
தை 28. - 10.02.2017 வெள்ளிக்கிழமை. இடம் : சேதுபதி மண்டபம், அடிவாரம், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 10.02.2017
காலை 09.00 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. அடிவாரம், சேதுபதி மண்டபத்திற்க்குப் புதுசேரி சப்பரத்தில் எழுந்தருளல்.வாகனம் : 08.00 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாபுரிக்கண்மாயில் வாணவேடிக்கை விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை திருக்கண் மண்டகபடிக்கு எழுந்தருளல். இரவு 09.00 மணிக்கு இரதவீதி திருவுலா.
ஒன்பதாம் திருநாள்
தை 29. - 11.02.2017 சனிக்கிழமை. இடம் : அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில் - துரையூர் மண்டபம், பழனி.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 11.02.2017
காலை 08.45 மணிக்கு : அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் இரதவீதி திருவுலா. அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், துறையூர் மண்டபத்தில் எழுந்தருளல்.வாகனம் : இரவு 09.00மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி இரதவீதி திருவுலா.
பத்தாம் திருநாள்
தை 30. - 12.02.2017 ஞாயிற்றுகிழமை.
மண்டகப்படி நடைபெரும் இடம் : 12.02.2017
காலை 09.00 மணி : அருள்மிகு வள்ளி தேவசேன சமேத முத்துக்குமார சுவாமி - புதுச்சேரி சப்பரத்தில் இரதவீதி திருவுலா.தெப்போற்சவம் : மாலை 07.00 மணிக்கு மேல் தெப்பத் தேர், இரவு 11.00 மணிக்கு மேல் கொடி இறக்குதல்
Vishwaroopa Dharsan: 05.50 AM
Vizhaa Pooja: 06.40 AM
Sirukaala Pooja: 08.00 AM
Kaala Pooja: 09.00 AM
Uchikala Kaala Pooja: 12.00 PM
Sayaraksha Pooja: 05.30 PM
Rakkala Pooja: 08.00 PM
copyright©HOTEL VELS COURT.ALL RIGHTS RESERVED / DEVELOPED : HARIV web technologies